திருச்சி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

துறையூர் செப்-18
திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்டத் தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் பெரியாரின் 148 வது பிறந்த நாளை (செப்-17) முன்னிட்டு நேற்று சமத்துவபுரத்தில் உள்ள சமூக நீதி காத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.இதில் திருச்சி வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர்கள் செங்கை செந்தில், வாலீஸ்புரம் தமிழரசன், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரெங்கநாதபுரம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *