கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர்கள் தினம் மாபெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவிற்கு பி.ஜே.எம்.எம் மாநில தலைவர் பாண்டித்துரை தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மணிவண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீரங்கம், மாவட்ட துணைத்தலைவர்கள் சதீஷ் ராஜா, டேவிட் பிரபாகரன் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சைலு ஆண்டனி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8:30 மணியளவில் தொடங்கி இந்த விழாவில் தொடர் கொடியேற்றம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மணிவண்ணன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். 48க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

மாலை நடைபெற்ற விழாவிற்கு அன்பாலையம் ஸ்ரீ கலா குத்து விளக்கேற்றி துவங்கிவைத்தார். கோவை தாமரை பஸ் சர்வீஸ் ரவிச்சந்திரன், உத்தம் பவுண்டேசன் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். அப்பாலும் அடி சேர்ந்தார் சிவனடியார்கள் திருக்கூட்டம் சிவ.ஆர்.கணேசன், அகில பாரத சன்னியாசிகள் சங்கம் ஸ்ரீலஸ்ரீ மூர்த்திலிங்கதம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்.

மேலும் தாய் அல்லது தந்தை இல்லாத 300 குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் பள்ளி பைகள் வழங்கப்பட்டன. 9 விதவை தாய்மார்களுக்கு தையல் எந்திரங்களும், 7 விதவைத் தாய்மார்களுக்கு இஸ்திரி பெட்டிகளும் வழங்கப்பட்டன.
ஆட்டோ ஓட்டும் 300 தொழிலாளர்களுக்கு புதிய சீருடைகளும், 300 கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலுக்கான உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தினக்கூலி வேலை செய்யும் 250 தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கலந்து கொண்ட 1500 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவா அவர்கள் அறுசுவை அன்னதானம் வழங்கினார். மேலும் பரதநாட்டியம், பறை இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *