தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது –

மாவட்ட ஆட்சியர் துரை,இரவிச்சந்திரன் அறிவிப்பு.

அவரது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளவாறு
அரசுபோட்டித்தேர்வுகளுக்கானஇலவச பயிற்சி நடைபெறு தல் கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு

பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்க் மூலம் https://bit.ly/3ND1U95 தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து இணைந்து கொள்ள சுய அறிவுறுத்தப் படுகிறார்கள்.

தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்த பின்பு, தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், கதவு எண்.168. முகமதியா நகர்(எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை அஞ்சல் என்ற முகவரியில் இயங்கி வரும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக TNPSC / SSC / TNUSRB ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசியர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு
தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *