பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மலைக்கோயிலில்அருள்மிகு போகர் சன்னதி ஒரு உபசன்னதியாகும். போகர் சன்னதிக்கு நித்தப்படித்தர
சாமான்கள் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் மலைக்கோயில் மடப்பள்ளியிலிருந்து தினந்தோறும்வழங்கப்பட்டு வருகிறது. சன்னதி மின்சார வசதியும் பராமரிப்பு பணிகளும் திருக்கோயில்
நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு பாத்தியமான போகர்சன்னதியில் உள்ள மரகதலிங்கம், உற்சவர் மூர்த்திகள் மற்றும் அவைகளுக்கு தங்கம், வெள்ளிஆபரணங்கள், கவசங்கள் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளது. அவை பழனியாண்டவர்திருக்கோயில் நிர்வாகத்தின் ஒப்புதலுடன் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.

திருக்கோயில் மூலம் வருடந்தோறும் ஒன்பது நாட்கள் நடத்தப்படும் நவராத்திரி திருவிழாவில் விஜயதசமியன்று வில்அம்பு போடும் நிகழ்வில் போகர் சன்னதி பூசகர்களும் விழாவில் பங்குகொள்கிறனர். இத்திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களில் பூசை செய்யும் அந்தந்த பூசகர்களுக்கு செய்யும் மரியாதையைப் போன்றே போகர் சன்னதியில் பூசை செய்பவர்களுக்கும் விஜய தசமி விழாவில் மரியாதை செய்யப்படுகிறது.

போகர் சன்னதியின் பூசகர்கள் போகர் சன்னதி உரிமை தங்களுக்கு தனிப்பட்டது என உரிமைகோரி திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையாக உள்ளது. அதில் திருக்கோயில் நிர்வாகம் தடையாணை பெற்றுள்ளது. கடந்த 27.01.2023 அன்று நடைபெற்ற மலைக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் மூலம் போகர் சன்னதி சுவற்றில் வரையப்பட்டிருந்த சுவரோவியங்களை தன்னிச்சை அழித்துவிட்டனர். இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போகர் சன்னதி பூசகர்கள் தங்களின் சுய நலனுக்காகவும், உள்நோக்கத்துடனும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முற்படுகின்றனர். மலைக்கோயிலில் நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்தக்கூடாது என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக போகர் சன்னதி பூசகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்கு சட்ட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிது என்று திருக்கோயில் சார்பில் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *