எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே பூம்புகாரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொற்றவை பந்தலில் சித்திரை முழு நிலவு இந்திர விழா சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம். பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வன வணங்குவதாக ஐதீகம் பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா கடந்த 15 ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *