விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அறியந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்கா அம்பிகை ஆலயத்தின் 14-ஆம் ஆண்டு சித்திரை பௌர்ணமி சூரசம்ஹார விழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, இதனை தொடர்ந்து இன்று விஷ்ணு துர்காம்பிகை மஹிஷாசூரனை சம்ஹாரம் செய்து மஹிஷாசூரமர்தினியாக அவதாரம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு சூரசம்ஹாரம் செய்யும் சூலாயுதத்தை அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்காம்பிகை ஆலய அறக்கட்டளையின் திருஞான மணிபால துர்க்கை சித்தரிடம் எடுத்து கொடுத்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் பிரம்மதேசம், அரியந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விஷ்ணு துர்க்காம்பிகை ஆலய அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் திருஞான மணிபால துர்க்கை சித்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபி பாலச்சந்திரன், சென்னை சேப்பாக்கம் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் மதுமதி,சென்னை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வைத்தியநாதன்,விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்,மரக்காணம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தயாளன் ,ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனி, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான R.R.K.செந்தில், திருவள்ளூர் மாவட்டம் பஞ்சாயத்து துணை இயக்குனர் ஸ்ரீதர்,அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஐயர், பாஜக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன்,மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர். என் .நவீனா நித்தியாந்தம், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் தருமன்,மயிலம் மேற்கு ஆன்மீகப் பிரிவு ஒன்றிய தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *