திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் சார்ந்த யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
9 ஆவது வார்டு கவுன்சிலர் நாகூர் மீரான் வரவேற்றார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, பிரம்ம குமாரி முத்துலட்சுமி பங்கேற்று, தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் மனநலம் சார்ந்த கருத்துரைகளை பட விளக்கங்கள் மற்றும் யோகாவின் மூலம் விளக்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் களப்பணி உதவியாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.