தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் எக்கோ கிளப்பு சார்பில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் வனத்துறையின் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா வாழ்த்துரையில் பேசும்போது மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு பற்றியும் இன்றைய சூழலில் ஒவ்வொரு மாணவர்களும் சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்ந்து பொறுப்புடன் நாட்டின் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துள்ள விஷயங்களை மாணவர்களுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி பாரஸ்ட் டிவிஷன் போடிநாயக்கனூர் வனச்சரக அலுவலர் ஜி. நிர்மலா பங்கேற்று வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் வனத்தின் விதி முறைகள் பற்றியும் பல்லுயிர் பாதுகாப்பை பேணுதல் இயற்கை வளங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் எல்நினோ பேரிடர் மேலாண்மை பற்றியும் வனக்காவலர் தேர்வு எவ்வாறு எதிர்கொண்டு வேலைவாய்ப்பு பெறுவது பணியிடங்கள் பற்றியும் மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை மாணவிகளும் பங்கேற்று பல்வேறு வனத்துறை வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடைந்தார்கள் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜி. தீபா நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *