திருச்சி, உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் நடைபெற்றது .சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார்.
முதுகலை கணித ஆசிரியர் ஸ்ரீதர், உடற்கல்வி ஆசிரியர் கல்பனா, யோகம் பிசியோதெரபி சென்டர் இயன்முறை மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் சங்க வட்டார தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா, சங்க சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம் யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கௌதம் உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்று,
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் மீட்டெடுத்து, அவர்களை பழக்கத்திற்குள்ளானவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என் உறுதிமொழி ஏற்றனர்.நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்