கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் சுமார் 20 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது வால்பாறை பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கும் பொருட்டு இந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து சென்று தீ அணைக்கப்பட்டு வருகிறது.

வால்பாறையில் இருந்து சேக்கல் முடி எஸ்டேட், உருளிக்கல், சோலையார் அணை, பன்னி மேடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது‌. அதில் குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னி மேடு மற்றும் உருளிக்கல் ஆகிய பகுதிகளில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு ஒரே வரிசையில் இருந்த 12 வீடுகள் எரிந்து சேதமாகியது தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் வால்பாறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் என்பதால் அங்கு தீயணைப்பு வீரர்களால் விரைந்து சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலை ஏற்படுகிறது. மேலும் வால்பாறை தீயணைப்பு நிலையத்தில் சிறிய அளவிலான தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. அத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான தீயணைப்பு வீரர்களும் பணியாற்றி வருகிறார்கள் மேலும் வனப் பகுதி என்பதால் அங்கு பல்வேறு வன விலங்குகளின் தொந்தரவும் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு பி.எஸ்.என்.எல். சேவை இரண்டு மாதங்களாக செயலின்றி உள்ளது. இதனால் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்க்கு கூட தகவல் தெரிவிக்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே தோட்டத் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேக்கல் முடி எஸ்டேட், உருளிக்கல், சோலையார் அணை, பன்னி மேடு ஆகிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் ஏதுவாக சோலையார் அணை பகுதியில் புதிதாக ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *