துறையூர் அக்-01
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.10. 2026 சனிக்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது.கொப்பம்பட்டி 110/33-11KV, து.ரெங்கநாதபுரம் 33/11KV மற்றும் த.முருங்கப்பட்டி 33/11KV ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு 03-10-2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்