கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளி அடுத்து ஜம்பு குட்டப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன், பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக ஜம்பு குட்டப்பட்டி அண்ணாமலை கன்சல்டிங் உரிமையாளர் கார்த்திக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயபால், சக்கரவர்த்தி, ஊத்தங்கரை வேங்கன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தூயமணி, முன்னாள் மாவட்டச் செயலாளர் தென்னரசு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெற்றி, பர்கூர் நகர கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனி,வைரவன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *