தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது விற்பவர்களை கூண்டோடு தூக்கும் காவல்துறை

மதுவிலக்கு சோதனையில் ஒரே நாளில் 22 பேர் கைது மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு மதுவிலக்கு வேட்டை 14.05.2023-ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடத்திய மதுவிலக்கு சோதனையில் மொத்தம் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதில் 336 லிட்டர் கள்ளச்சாராயம், 5.50 லிட்டர் IMFL மது பாட்டில்களும், 4550 லிட்டர் சாராய ஊரலும், மது கடத்த பயன்படுத்தபட்ட 01-மூன்று சக்கர வாகனமும், 01-இரண்டு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. மேலும் 22 எதிரிகளை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க ஆய்வாளர் உலகநாதன்
மற்றும் கிராமிய காவல் நிலையம் உதவி ஆய்வாளர் துரைராஜ் மற்றும் சக காவலர்கள் சேர்ந்து சிறப்பான பணியில் ஈடுபட்டு வருகின்றன

திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *