வாடிப்பட்டி,

சோழவந்தான் தொகுதி தி.மு.க சார்பில் திராவிடமாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வாடிப்பட்டியில் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. இந்த கூட்டத்திற்குமாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் பால்பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் ., கலந்து கொண்டு திருச்சி. சிவா.எம்.பி சிறப்புரை யாற்றிபேசியதாவது.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் வரி வாங்கிக் கொண்டார்கள், ஆனால் அந்த வரிப்பணம் கஜானாவிலிருந்து வேறு இடத்திற்கு சென்றதே தவிர மக்களுக்கான திட்டங்களாக வரவில்லை, . இதுதான் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது, ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளிலேயே கோரிக்கை கொடுக்காமலே மக்களின் தேவை அறிந்து செயல்படுகின்றது

திமுக ஆட்சி மட் டுமேகர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, இந்த நாட்டை மதத்தின் பெயரால், வேறு பல காரணங்களால் மக்களை பிரிக்க நினைப்பவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கூட்டாட்சிக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல் படுத்தப்பட்டு வருகின்றது என்று பேசினார்.

மேலும் இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் சுப.த.சம்பத், மாவட்ட கழக… திமுக நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், பால சுப்பிரமணியன், சேகர், முத்தையன், வக்கில் முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி.பி.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், தன்ராஜ், பரந்தாமன், பொதும்பு தனசேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அயூப்கான்,பேரூர் செயலாளர்கள் ரகுபதி, சத்தியபிரகாஷ், மனோகர வேல்பாண்டியன், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர்கள் கார்த்திக், கண்ணன், சாமிநாதன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணவேனி பால்பாண்டியன், கொத்தாளம் செந்தில். இளைஞர் அணி நிர்வாகி வெற்றிச் செல்வன்.ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுமணி சகுபர் சாதிக் .ஆனந்தன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முடிவில் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *