ரெயில்வேயில் வேலைக்காக நிலம் பெற்ற வழக்கில் அமலாக்க துறை முன் ஆஜரான ராப்ரி தேவியிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடந்தது. புதுடெல்லி, ராஷ்ட்ரீய ஜனதாதள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டுவரை ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, பாட்னாவை சேர்ந்த சிலருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க அவர்களிடம் இருந்து நிலம் லஞ்சமாக பெறப்பட்டது. இவ்வழக்கில், லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ராஷ்டிரீய ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி. பிரேம்சந்த் குப்தா, அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ. கிரண் தேவி, அவருடைய கணவர் அருண்சிங் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். பீகார் முதல் டெல்லி-என்.சி.ஆர். வரையிலான பகுதிகளில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளிகளின் 9 இடங்களில் சி.பி.ஐ. அமைப்பு கடந்த செவ்வாய் கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. பீகார் மாநிலம் பாட்னா, அர்ரா மற்றும் அரியானா மாநிலம் குருகிராம், ரேவாரி, டெல்லி, நொய்டா ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு பீகார் முன்னாள் முதல்-மந்திரியான ராப்ரி தேவி இன்று நேரில் ஆஜரானார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த அக்டோபரில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், பீகார் முன்னாள் முதல்-மந்திரிகளான லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்பட அவர்களது மகள் மிசா பாரதி மற்றும் 13 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி, லாலு, ராப்ரி தேவி மற்றும் மிசா பாரதிக்கு டெல்லி கோர்ட்டு ஒன்று ஜாமீன் வழங்கி உததர்விட்டது. இதற்காக ரூ.50 ஆயிரம் தனிநபர் ஜாமீன் தொகையை தலா ஒவ்வொரு குற்றவாளியும் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதற்கு இணையான பிணை தொகையையும் செலுத்த உத்தரவிட்டது. மற்ற 13 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *