சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அமைந்துள்ள வீரப்பனின் சமாதியில், அவரது 22-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் வீரப்பனின் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின்போது வீரப்பனின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது. மூலக்காட்டில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் வீரப்பனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.