பாபநாசம் செய்தியாளர் – தீனதயாளன்

பாபநாசம் அருகே அய்யம்ப்பேட்டையில்
குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பாலத்தை விரைவில் முடிக்கக் கோரியும் தற்காலிக பாதை செய்து தர வேண்டியும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலை துண்டிக்கப்பட்டது. அய்யம்பேட்டை வடபுறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றி அய்யம்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது.

எனவே புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், அது வரை தற்காலிக பாதை அமைத்து தர வேண்டியும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) சார்பில் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

மாநில குழு உறுப்பினர் மாசிலா மணி, பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் பிரபு, மாதர் சங்க பாபநாசம் ஒன்றிய செயலாளர் விஜயாள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *