கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கோவை, நீலகிரி, குன்னூர்,நெல்லை, ஹைவேஸ்,மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் தோட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முதற்கட்டமாக நாளை கோவையில் நடைபெற இருப்பதாகவும் அதைத்தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி காலை 10.30.மணிக்கு வால்பாறை மார்கெட் பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பிதழ் பெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ஐந்து தொழிற்சங்கங்கள் ஏற்படுத்திய ஒப்பந்தப்படி தோட்டத்தொழிலாளர்கள் தற்போது 425 ரூபாய் ஊதியம் பெற்று வரும் நிலையில் அரசு தேயிலைத் தோட்டக்கழக தொழிலாளர்கள் 358 ரூபாய் மட்டுமே பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மூலம் சுமூக தீர்வுகாணவும், தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்துவரும் தொழில்வரி சம்பந்தமாகவும்,தொழிற்சங்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தை அதிகப்படுத்த உள்ளதாக தெரியவரும் நிலையில் அதுபற்றிய ஆலோசனையும், அரசு அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் நீதிமன்றம் சென்றுள்ளதால் அது சம்பந்தமாக சுமூக தீர்வை ஏற்படுத்தவும் விரைவில் தொழிலாளர்களுக்கு நானூற்று 55 ரூபாய் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை மேற்க் கொள்வது சம்பந்தமாகவும், ஒரு தொழிலாளி ஆண், பெண்ணிற்கு இன்றைய நிலைமையில் 23 ஆயிரத்து ஐநூறு ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அதை சீர்செய்வது சம்பந்தமாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *