திருப்பத்தூர் மாவட்டத்தின் 4-வது மாவட்ட கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாக அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.இரு வாரங்களுக்குள் கள்ள சாராயம் முழுமையாக அளிக்கப்படும் இதுவரை 20 ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் அழிக்கப்பட்டிருக்கிறது.மாவட்டத்தில் 15 குழுக்கள் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.குற்றங்களை குறைக்க அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும்.

பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மேலதிகாரிகளை அனுகலாம் என்றார்.பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் அதற்காக பிரத்யேக எண். 9159959919 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடிய விரைவில் அனைத்து போக்குவரத்துகளும் சரி செய்யப்படும். விபத்துகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செயற்கை மணல் தயாரிப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பத்தூரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *