நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (24.05.2023) நடைபெற்றது.

சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (24.05.2023) நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் சேந்தமங்கலம் வட்டம், பச்சுடையாம்பட்டி, பொட்டணம், கொண்டமநாயக்கன்பட்டி, பெரியகுளம், பொம்மசமுத்திரம், அக்கியம்பட்டி, பள்ளம்பாறை, புதுக்காம்பை ஆகிய ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மின்னணு குடும்ப அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 62 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச, உமாவிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்மந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த வருவாய் தீர்வாயத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை பதிவேடு, பிறப்பு இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு சரிபார்த்தார்.

வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வைத்துள்ள பதிவேடுகளில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை கலந்தாலோசனைகள் மூலமாக உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ளருத்துவர் ச. உமா அறிவுறுத்தினார்.

சேந்தமங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2023 வியாழக்கிழமை அன்று சேந்தமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பொன்னார்குளம், முத்துகாபட்டி, சிதம்பரப்பட்டி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, பள்ளிப்பட்டி, கல்குறிச்சி, உத்திரகிடிகாவல் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று சேந்தமங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஈச்சம்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி, துத்துக்குளம், நடுக்கோம்பை, திருமலைகிரி, வாழவந்திக்கோம்பை, திருமலைப்பட்டி, பவித்திரம், பவித்திரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

30.05.2023 செவ்வாய்கிழமை அன்று வரகூர், தேவராயபுரம், வரதராஜபுரம், முட்டாஞ்செட்டி, எருமப்பட்டி, பொன்னேரி, சிங்களங்கோம்பை, தோட்டமுடையாம்பட்டி, காவக்காரன்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 31.05.2023 புதன்கிழமை அன்று கோணங்கிப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, பாலப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, எஸ்.பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, அக்ரஹார பழையபாளையம், கெஜக்கோம்பை, புதுக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 01.06.2023 வியாழக்கிழமை அன்று தூசூர், பெருமாப்பட்டி மேற்கு, பெருமாப்பட்டி கிழக்கு, கெஜல்நாயக்கன்பட்டி, பொம்மசமுத்திரம் அக்ரஹாரம், ரெட்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வருவாய் கிராம பொதுமக்கள் சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வருவாய் தீர்வாயத்தில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும். என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா கேட்டுக்கொண்டுள்ளார்

இந்த வருவாய் தீர்வாயத்தில் சேந்தமங்கலம் வட்டாட்சியர் .செந்தில், வட்டாட்சியர் (பொது மேலாளர்) அரவிந்த், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், சுகிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *