நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேந்தமங்கலம் அமுதம் நியாய விலைக்கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்து, பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா ? என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா? என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. உமா கேட்டறிந்தார்.

பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார்.

இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா ? என்றும் சரிபார்த்தார்.

மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. உமா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், பொதுமக்களிடம் நியாய விலை கடைகளில் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் முறையாக கிடைக்கப்படுகின்றனவா என்பதனை மாவட்ட ஆட்சித்தலைவர் டக்டர் ச. உமா கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *