புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்தார். சென்னை, டெல்லியில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – திருவாடுதுறை, தருமபுர,மதுரை உள்பட 20 ஆதினங்கள் அழைக்கப்படுகிறார்கள். செங்கோலையில் பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே உயர்ந்த இடத்தில் வைக்க இருக்கிறார் செங்கோலை தயாரித்த உம்மிப்பிடி சகோதர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கிறது செங்கோல் பரிமாற்றம் *ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் தற்போதும் பல நாடுகளில் அமலில் உள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கபப்டுவதன் மூலம் தமிழுக்கும் தழிருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார். நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர். *அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்க போகிறது. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகளின் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவர்தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள். மக்களுக்காவாவது நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *