பவானிசாகர் வடக்கு ஒன்றியம்
உத்தண்டியூர் ஊராட்சி அய்யன் சாலை முதல் அக்கரை தத்தப்பள்ளி வரை 39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியும்,தொப்பம்பாளையம் பேருந்து நிலையம் தொடங்கி அம்மாபாளையம் மேட்டுப்பாளையம் சாலை வரை 76.08 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை,முடுக்கன் துறை ஊராட்சி புளியம்பட்டி சாலை தொடங்கி முடுக்கன் துறை ஆற்று படுகை வரை29.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைஅமைக்கும் பணியை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கிவைத்தார்.
பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் மார்க்கெட் சதுக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் அமையவிருக்கும் புதிய நியாய விலை கடை , மார்க்கெட் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் அமைய உள்ள வடிகால் அமைக்கும் இடத்தை பார்வையிட்டார் அதனை தொடர்ந்துபவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக அமைய உள்ள தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் அவர்களின் மணிமண்டப வேலைகளை பார்யிட்டு,பகுடுதுறை பகுதியில் எரிவாயு தகனமேடை பணிகளை ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் பேரூராட்சி தலைவர் மோகன் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வம் உட்பட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர் வார்டு உறுப்பினர்கள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்