பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே ரகுநாதபுரத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளியூர்களில் இருந்து இங்கு வந்து செல்ல வசதி இல்லாத நபர்கள் இக் கல்லூரியிலேயே தங்கி
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இங்கு தங்கி உள்ள ஆசிரியைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இக்கல்லூரியைச் சேர்ந்த 4 ஊழியர்கள் நடந்து கொள்வதாக கூறி இன்று விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணிப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரகுநாதபுரம் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,
தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தனர்.

பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியினை புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *