விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமாட்சி அம்மன் வளாகத்தில் சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களின் நலன் கருதி 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை சமீபத்தில் வழங்கினார் அதற்காக இந்த சங்கம் அவரை பாராட்டுகிறது

பெண்கள் மீதான வன்முறைகளும்பாலியல் வன்கொடுமைகள் நடக்காத வண்ணம் பெண் குழந்தைகளுக்கு தொடுதலில் சரி எது தவறு எது என்பதை குறித்து சிறுவயதிலிருந்தே சொல்லித் தர வேண்டும் அவர்களுக்கு தைரியம் அளித்து அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நாம் இருக்க வேண்டும் மரக்காணம் எக்கயார் குப்பத்தில் விஷசாரயம் குடித்து இறந்த 14 பேர் செங்கல்பட்டு மாவட்டம் பேருங் கரணை பேரம்பாக்கத்தில் விஷ சாராயம் குடித்து இருந்த எட்டு பேர் இறந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது

இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸிற்கு மாற்றப்பட்டுள்ளது இந்த வழக்கை நியாயமான முறையில் நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று இந்த சங்கம் கேட்டுக் கொள்கிறது திண்டிவனம் நேரு வீதியில் செயல்படும் ஆர்யாஸ் உணவகம் ஏ எஸ் எஸ் மளிகை கடை நடக்கும் பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசலாக உள்ளது இதனால் இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உடனடியாக சரி செய்ய இந்த சங்கம் கேட்டுக்கொள்கிறது

நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி தங்கவேலு மாநில இணை பொது செயலாளர் டி ஜி வி அரவிந்தன் மாநில இணை பொது செயலாளர் ஆர் எஸ் சரவணன் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆர் ராமசாமி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் என் ராமச்சந்திரன் மாநில தலைமை நிலைய செயலாளர் சென்னை சி தணிகை மலை மாநில மகளிர் அணி என் காஞ்சனா திண்டிவனம் நகர தலைவர் முத்து செஞ்சி. L லட்சுமணன் செஞ்சி நகரத் தலைவர் கார்த்தி சத்தியமங்கலம் சந்தோஷ் சேத்பட் அண்ணாமலை அன்னமங்கலம் முருகேசன் திண்டிவனம் மகளிர் அணி எஸ் செல்வி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *