பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஆண்டிமடம் அருகே இடி தாக்கியதில் கட்டுதறியில் இருந்த இரண்டு பசு மாடுகள் பலியான சம்பவத்தால் அந்தப் பகுதியில் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கங்காசலம் ஆவார் இவர் விவசாயம் செய்து வருகிறார் விவசாயத்திற்கு துணையாக மாடுகள் வளர்த்து வருகிறார் இந்நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக இடி விழுந்து அவரது மாடுகள் பலியாயின.

அரியலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக மாலை திடீரென இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது இதன் தொடர்ச்சியாக இரவிலும் மழை மற்றும் பயங்கர சத்தத்துடன் பலத்த இடி சத்தம் கேட்டது இதில் கங்கா சலத்திற்கு சொந்தமான ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு மாடுகள் இடித்தாக்கி இறந்துவிட்டன மாடுகளின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது கண்டு கங்காசலம் அதிர்ச்சி அடைந்தார்

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் தெரிவித்தார் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவர் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது இறந்து போன இரண்டு மாடுகள் குறித்து இழப்பீடு வேண்டும் என்று விவசாயி கங்காசலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இடி தாக்கி இரண்டு பசு மாடுகள் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *