திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர் போலீசார் கைது செய்தனர்
தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் வெளி மாநிலத்தவர்களும் தங்கி இருந்த பணியாற்றிவருகின்றன இந்த நிலையில் வட மாநில தொழிலாளர் என்ற போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து கொடுத்து திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்
இவர்களை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி கைது செய்து வருகின்றனர். இதனிடையே திருப்பூர் முத்தனம் பாளையம் செவந்தான் பாளையம் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுடன் சேர்ந்து வங்கதேசத்தைச் சேர்ந்தவர் வாலிபர்களும் முறைகேடாக தங்கியிருப்பதாக நல்லூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனிடையே போலியான ஆதார் கார்டு இன்று அதிகாலை தனிப்படை போலீசார் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பாஸ்போர்ட் விசா போன்ற எந்த வித ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கி இருந்த இரண்டு வங்கதேச வாலிபர்களை கண்டுபிடித்தனர் பின்னர் அவர்கள் நல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வந்து பணி நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் வயது 26. பைசல் அகமது. வயது 35. மேற்கு வங்காளத்தில் இருந்து போலியாக தயாரித்த ஆதார் கார்டு கொடுத்து திருப்பூர் பணி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருப்பதும் தெரிய வந்தது
இதனை எடுத்த இரண்டு பேரையும் திருப்பூர் நல்லூர் போலீசார் கைது செய்து இவர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் வேறு யாராலும் திருப்பூரில் தங்கி உள்ளார்களா என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்