தென்காசி, மே 20
தென்காசி மேலசங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயிலுடன் இணைந்த கோமதி அம்பாள் உட னுறை சங்கரலிங்க சுவாமி கோயில் மகாகும்பாபி ஷேக விழா வெகு விமர் சையாக நடைபெற்றது. கும்பாபி ஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17ம்தேதி காலையில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமம், கோபூஜை,
பூர் ணாஹுதி நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள், எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
18ம்தேதி காலையில் பூத சுத்தி, துவார பூஜை, கன்யா பூஜை இரண்டாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், வேத பாராயணம், திருமுறை பாராயணம், பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலையில் மங்கள இசை, துவார பூஜை, சூரிய கும்ப பூஜை, பிம்பசுத்தி, ரக்க்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜைகள், பரிவார மூர்த்திகளுக்கு கண் திறக்கப்படும் வைபவம், நடைபெற்ளது. அதனைத் தொடர்ந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விமான மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில் பிரசன்ன பூஜை, திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. பூஜை களை கிருஷ்ண மூர்த்தி பட்டர், கோமதி நடராஜ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தி னர் செய்திருந்தனர்.