கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மை தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் ஏசி ஆறுமுகம் தலைமையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கோரிக்கை மனு அளித்தனர் உடன் தேசிய மகளிர் அணி தலைவி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருந்தனர்.

அந்தக் கோரிக்கையில் 152 ஜியோ அரசு ஆணையை ரத்து செய்திடவும் சிபிஎஸ் பணம் வருடத்துக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கு கணக்கெடுத்து ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்

மற்றும் இரண்டு வருட சரண்டர் பணம் கொடுக்கப்பட வேண்டும். தூய்மை தொழிலாளி பணியில் இருந்து இறந்து போனால் அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்.

மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை தொழிலாளிகளை நிரந்தரம் செய்திட வேண்டும்.டிரைவர் ,கிளீனர், கார்டன், பணியாளர், டி பி சி டெங்கு மலேரியா பணியாளர்கள் இவர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.

மற்றும் குப்பை கிடங்கில் சத்யா எனும் தூய்மை தொழிலாளி பணிபுரிந்து வருகிறார் குப்பை அரைக்கும் இயந்திரத்தில் தன் இரண்டு கால்கள் இயந்திரத்தில் சிக்கி இரண்டு கால்கள் நசுங்கிவிட்டது தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார்

அவருக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும். எனவும் மற்றும் குப்பை கிடங்கில் சிவகாமி எனும் பெண் பணிபுரியும் போது இறந்துள்ளார் அவருக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். எனவும் மற்றும் இதுவரை குப்பை கிடங்கில் பணிபுரிந்து கொண்டிருந்து . இறந்த ஒவ்வொரு தொழிலாளிகளின்குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்எனவும்கோரிக்கையில்கூறப்பட்டுள்ளது.கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மை பணியாளர் சங்கம் நிர்வாகிகள் கோவை மாவட்ட பொதுச்செயலாளா் செல்வராஜ்மண்டல் தலைவா் பகவதி மண்டல் பொதுச்செயலாளா் சுரேஷ் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *