மதுரையில் முன்னாள் இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சரும்,தமிழ்நாடு சட்டப்பேரவை அவைத் தலைவருமான பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் 18-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
