ஆண்டிபட்டி கிராம பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களில் விவசாய பணிகள் தீவிரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள பிச்சம்பட்டி கன்னியபிள்ளை பட்டி ஏத்த கோயில் கண்டமனூர் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே மக்களின் வாழ்வாதாரம் உள்ளது
இந்த மானாவாரி நிலங்கள் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தியதால் மானாவாரி நிலங்கள் வறண்டு கிடந்தன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் மானாவாரி நிலங்கள் ஈரப்பதத்துடன் உள்ளது. இதனை பயன்படுத்தி நிலங்களை டிராக்டர் மூலம் உழவு செய்து சமன்படுத்தி கம்பு சோளம் உள்ளிட்ட விதைப் பயிர்களை விதைத்து தீவிரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.