சிவகங்கையில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் ராமேஸ்வரனின் 62 வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம். 200க்கும் மேற்பட்டவர்கள் உணவருந்தினர்.

சிவகங்கை மாவட்டத்தில் மழை வேண்டி, சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் என். ராமேஸ்வரனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை நகர் சிவன் கோயில் எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராமேஸ்வரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கட்டிட தொழிலாளர்கள், ஏழை, எளியோர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று மன நிறைவுடன் காலை சிற்றுண்டியினை வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்ற நகர பொறுப்பாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர் தவமணி, நகரச் செயலாளர் மூர்த்தி, நகர துணை செயலாளர் ஜோதிபாசு, பொறுப்பாளர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *