புதுச்சேரி மாநில திமுக வர்த்தகர் அணிக்கு தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் என 13 புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு செய்திருக்கிறது.

புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, மாநில வர்த்தகர் அணிக்கு புதிய நிர்வாகிகள் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன், திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம் அவர்கள் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, புதுச்சேரி மாநில வர்த்தகர் அணித் தலைவராக சண்முகா சில்க்ஸ் உரிமையாளர் க. செல்வமுத்து குமார விநாயகம், துணைத் தலைவராக இரா. குரு (எ) சண்முகசுந்தரம், அமைப்பாளராக சு. ரமணன், துணை அமைப்பாளர்களாக அ. ஹாஜிமுஹம்மது, ந. சரவணன், ஆ. ஹரி, ரா. அன்புச்செல்வம்,அ. சுப்ரமணியன்,த. சத்தியகுமார், ரா. ஜெயப்பிரகாஷ், ப. கலியமூர்த்தி, செ. கருணாகரன், கா. சிதம்பரநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *