புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையில் சமீபத்தில் பழைய மாநில நிர்வாகிகள் கமிட்டியை கலைத்து விட்டு புதிய மாநில அமைப்பாளராக சிவகுமரன் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தொகுதி வாரியாக தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அணி அமைப்பாளர்கள் விரைவில் நியமிக்க படுவார்கள் என்று பேரவையின் நிறுவனத்தலைவர் R.L.வெங்கட்டராமன் தெரிவித்து இருந்தார் அதன் படி முதலியார் பேட்டை ,உப்பளம்,உருளையன்பேட்டை.ஏம்பலம் ஆகிய நான்கு தொகுதி களுக்கு தொகுதி அமைப்பாளர்களையும் , மாநில மகளிர் அணி அமைப்பாளரும் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து,
தற்போது புதுச்சேரி RLV ஜனநாயக பேரவைக்கு புதிய மாநில இலக்கிய அணி , இளைஞர் அணி , மாணவர் அணி அமைப்பாளர்களும் , ஊசுடு , வில்லியனூர், இந்திராநகர் ஆகிய தொகுதிகளுக்கு தொகுதி அமைப்பாளர்களையும் நியமிக்க, RLV பேரவையின் மாநில அமைப்பாளர் சிவகுமரன் பரிந்துரை செய்து இருந்தார். அதன் படி RLV ஜனநாயக பேரவையின் நிறுவன தலைவர் என்ற முறையில் கீழ் கண்ட நபர்களை அமைப்பாளர்களாக நியமனம் செய்து அறிவிக்கின்றேன்.

மாநில இலக்கிய அணி அமைப்பாள ராக .புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியை சார்ந்த S.R. சிவகுமார் அவர்கள் சமூகப் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆசிரியராக இருப்பதால் தமிழ் இலக்கியம் பேசுவதிலும் எழுதுவதிலும் திறமை மிக்கவர். அப்படிப்பட்ட இலக்கிய வாதியைத் தான் மாநில இலக்கிய அணி அமைப்பாளராக அறிவித்து உள்ளோம்.

மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ,
புதுச்சேரி காமராஜ் நகரை தொகுதியை சார்ந்த 34 வயதான R.ரவி வர்மன் அவர்கள் சோழர் களம் என்கிற பாத்திரிக்கையின் நிறுவனராக உள்ளார் . மேலும் பினிஸ் அட்ஸ் என்கிற விளம்பர தொழிலையும் செய்து வருகிறார். சமூக பணியில் ஆர்வம் உள்ளவரை மாநில இளைஞர் அணி அமைப்பாளராக அறிவித்து உள்ளோம்.

மாநில மாணவர் அணி அமைப்பாளர் , புதுச்சேரி வீமன் நகரை சார்ந்தவரும் 22 வயதே ஆன என்ஜினீயரிங் பட்டதாரி G. சிவபாலன் அவர்களை மாநில மாணவர் அணி அமைப்பாளராக அறிவித்து உள்ளோம். தொகுதி அமைப்பாளர்கள் ஊசடு தொகுதிக்கு அமைப்பாளராக, தொகுதி முழுவதும் நன்கு தெரிந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் அவர்களையும், வில்லியனூர் தொகுதி அமைப்பாளராக 30 வயதே ஆனவரும் பூர்வீகமாக வில்லியனூர் தொகுதியை சார்ந்த அருண் அவர்களையும் , இந்திரா நகர் தொகுதிக்கு , கோரிமேடு காமராஜ் நகரை சார்ந்த அம்புரோஸ் அவர்களையும் தொகுதி அமைப்பாளர்களாக பேரவையின் நிறுவனத் தலைவர் R.L. வெங்கட்டராமன் அறிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *