போகநல்லூர் ஊராட்சி சங்கனாபேரியில் உள்ளாட்சி தினம் கிராமசபைக்கூட்டம்:-

மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் பங்கேற்பு;-

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட போகநல்லூர் ஊராட்சி சங்கனாபேரி சமுதாய நலக்கூட கட்டிடத்தில் வைத்து உள்ளாட்சி தினம் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.

கிராமசபைக் கூட்டத்தில் வேளான்மைத்துறை தோட்டக்கலைத்துறை சமூகநலத்துறை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க துறையினரால்
திட்டப் பணிகள் தொடர்பாக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது.

பயனாளிகளுக்கு கத்திரி நாற்று. மிளகாய் நாற்று மற்றும் தக்காளி நாற்று வழங்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் ஆகியோரின் சேவையை பாராட்டி பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது.

மணிமேகலை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பூரணி அம்மன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் செயல்பாடுகள் பாரட்டப்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி செலுத்துதல், தூய்மை பாரத இயக்க நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி
திட்டம்-II ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நெகிழி தடை விழிப்புணர்வு ஆகிய பொருட்கள் சம்பந்தமாக விவாதித்து தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. என துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள்
பார்வையிட்டனர்.

இக்கூட்டத்தில் தோட்டகலைத்துறை இணை இயக்குநர் ஜெய பாரதி மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கனகம்மாள்,
ஊராட்சி மன்றத் தலைவர் குரு சண்முகப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர். சுப்பம்மாள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமுருகன்,முத்துப்பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனிமொழி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா, உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *