கோவை

கோவை மாவட்டத்தில் புறநகர் இயங்கும் காவல்துறை ரோந்து வாகனங்களில், எல் அண்ட் டி குழுமம் சார்பில் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

எல் அண்ட் டி குழுமம் சார்பில் இந்த கேமரா, காவல் துறை ரோந்து வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 2TB Hard Disk பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து, காவல் துறை கட்டுப்பாடு அறையுடன் இணைத்து வீடியோ காட்சிகளை பார்க்கும் வசதியும் வாகனத்திலேயே ஒரு Displayவும் பொருத்தப்பட்டு உள்ளது .

இன்று முதற்கட்டமாக 18 ரோந்து வாகனங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உரிய காவல் நிலையத்திற்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையின் மூன்றாவது கண்ணாக இந்த கேமராக்கள் செயல்படும் என்றும், IR விஷன், ஜிபிஎஸ் வசதிகளுடன் கூடிய இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு சேமிக்கும் திறன் உள்ளதாக கூறினார். அடுத்த கட்டமாக காவல்துறையின் இருசக்கர ரோந்து வாகனங்களிலும், கேமரா பொறுத்தபடும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தற்போது கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 11 ஆயிரம் கேமராக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக தெரிவித்தார்.

குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பதற்கும், இந்த கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எல் அண்ட் டி குழுமத்தின் திட்டத் தலைவர் சுரேஷ் சங்கர் நாராயணன்,செயல்பாட்டு மேலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *