கோவையில் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக நடைபெற்ற வாக்கத்தானில்,ஆட்டிசம் குழந்தைகள், வீல் சேர் மாற்று திறனாளிகள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்…

உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் தேதி , உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கௌமார பிரசாந்தி அகாடமி சார்பாக கோவை கொடிசியா மைதானத்தில் வாக்கத்தான் நடைபெற்றது..

மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள்,என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ,பிரம்மாண்ட வாக்கத்தானில், . ஸ்பெஷல் சைல்ட் குழந்தைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும், பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.

கோவை கொடிசியா கிரவுண்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஸ்பெஷல் சைல்ட் குழந்தைகளுக்கும், கொடிசியா கிரவுண்டில் இருந்து விளாங்குறிச்சி வரை, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பெற்றோர்களுக்கும் வாக்கத்தான் நடைபெற்றன.

இதில் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏராளமானவர் பங்கேற்றனர், அதிகாலை நடத்த இந்த வாக்கத்தானில் ஆர்வமுடன் பங்கேற்று, உற்சாகத்துடன் சாலையில் நடந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கவுமாரா பிரசாந்தி அகாடமி சார்பாக, மாற்று திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் மேபாட்டுக்கு தேவைப்படும் பயிற்சி தருவதற்கென யாஸ்யா எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் தோறும் வீடுகளுக்கே சென்று இலவசமாக விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தர இத்திட்டத்தில் முன்னெடுக்க உள்ளதாக கௌமார பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் தெரிவித்தார்…நிகழ்ச்சியின் இறுதியாக பரிசு வழங்கும் நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினர்களாக கவுமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சக்தி மசாலா நிறுவன இயக்குனர் சாந்தி துரைசாமி, பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, பாரா ஒலிம்பிக் வீரரும் ஆசிய போட்டியில் தங்கம் வென்றவருமான முத்துராஜா, சக்தி திறனாலயம் நிர்வாக அறங்காவலர் கவுரி மாணிக்கம், புரொபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் வித்யா செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *