வலங்கைமான் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 484 மனுக்கள் வரப்பெற்றன. முகாமை டி ஆர் ஓ சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள்தான் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது, நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் தலைமையில் நடைபெற்றது.

வட்டாட்சியர் ரஷ்யா பேகம், பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை ஒன்றிய குழு உறுப்பினரும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான வீ. அன்பரசன் துவக்கி வைத்தார்.

முகாமில் பேரூராட்சி துறை, காவல்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலன் துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முகாமில் வருவாய் துறைக்கு 107, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 8, பேரூராட்சி தொடர்பாக 26, தொழிலாளர் நலத்துறைக்கு 1, மின்சார வாரியத்துக்கு 66,காவல் நிலையத்துக்கு 6 மனு மற்றும் இதர மனுக்களாக 270 மனுக்கள் உட்பட 484 மனுக்கள் வரப்பட்டன.

இதில் பொதுநல மனுவாக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் விதமாக உரிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என செம்மங்குடியை சேர்ந்த ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் சார்பில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், கோவில்பத்து பகுதிக்கு ஈம கிரியை மண்டபம் கட்டித் தர வேண்டும்,

பழுதடைந்த நிலையில் உள்ள குடவாசல், பாபநாசம் சாலையை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுநல மனுக்கள் வரப்பெற்றன. நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தனித்தமிழ்மாறன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *