அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் எம்.வி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்

இதில் சிறப்பாக விளையாடிய முதல் நான்கு இடங்களை பிடித்த தென் மண்டல போலீஸ் அணியினர் விக்கி நினைவுக் குழு பாலமேடு மதுரை ரிசர்வ் லைன் அணியினர் விக்கி நினைவு குழு பாலமேடு அணியினருக்கு சுழற் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பணம் பரிசு வழங்கப்பட்டது.

இந்த வாலிபால் போட்டிக்கான ஏற்பாடுகளை எம்.வி.சி. தலைவர் ரவி, செயலாளர் பிரபு, பொருளாளர் விஜி, அமைப்பாளர் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் சீமான், கமல், அசோக், ரகு, ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *