தென்காசி, மே – 11
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர் இல்லம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இங்கு தங்கியுள்ள
ஆதரவற்ற முதியவர்களின் கவலைகளை மறக்கவும், அவர்களை மகிழ்ச்சி படுத்தவும், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற் காகவும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆதரவற்ற இல்லத்தில் அன்புடன் ஒரு நாள் நிகழ்ச்சி மூலம் முதியவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆதரவற்ற முதியோர் இல்லத்தின் பூங்காவை சுத்தம்செய்து கொடுத்தனர். மேலும் ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆதரவாகவும், அன்பை பரிமாறும் நிகழ்ச்சியாகும் அன்புடன் ஒரு நாள் நிகழ்ச்சி அமைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் சார்பாக ஆதரவற்ற முதியவர் இல்லத்திற்கு தேவையான வாஷிங் மெஷின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் இ.சீலா, பர்சார் என்.சரவணன் மற்றும் ஆங்கில உதவி பேராசிரியர் டாக்டர் லதா மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடும்பங்களை இழந்து அன்பிற்காக ஏங்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு கல்லூரி மாணவிகளின் அன்புடன் ஒரு நாள் நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிகழ்ச்சியில் பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா மற்றும் நிர்வாகி ஜமீமா ஜின்னா, செய்யது அலி பாத்திமா, ஜெய்கரன் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு, கல்லூரி மாணவி களுக்கும் பேராசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் எங்காவது ஆதரவற்ற முதியோர் இருந்தால் நமது பசியில்லா தமிழகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள 93639 14416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா மற்றும் நிர்வாகி ஜமீமா ஜின்னா, செய்யது அலி பாத்திமா, ஜெய்கரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.