கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதியில் காண புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது அதில் உள்ளவாறு கடலூர் மாவட்டத்தில் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தி 924 ஆகும்
அதனைத் தொடர்ந்து ஒன்று 2024 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான பட்டியல் பெறப்பட்டது


சிறப்பு சுருக்கு முறை திருத்த காலங்களில் மற்றும் 82.884 மனுக்கள் பெறப்பட்டது மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடி விசாரணை செய்யப்பட்டு
24.458 பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்

இந்நிலையில் நேற்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய சிறப்பு சுருக்கி முறை திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்
அப்போது அவர் கூறியதாவது

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டசபத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம்21.23.276 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள்21.45.551. பெண் வாக்காளர்கள்2 0.77.438 இதர 287 ஆகும் புதிய வாக்காளர் பட்டியல் படி கடலூர் மாவட்டத்தின் 9 சட்டசபை தொகுதியின் வாக்காளர்கள் திட்டக்குடி (தனி) தொகுதியில் 2.18.499 . விருத்தாச்சலம் 2.51.762 நெய்வேலி 2.01.309 பண்ருட்டி
2.47.570. கடலூர்.2.36.641. குறிஞ்சிப்பாடி 2.44.611. சிதம்பரம் 2.43.565 . காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 2.29.156. புவனகிரி 2.49.163 . பேர் இடம் பெற்றுள்ளனர் வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்த முறை நடைபெற உள்ளதால் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களில் வேலை நாட்களில் மனுவாக அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன் நேர்முக உதவியாளர் பொறுப்பு ஜெகதீஸ்வரன் தேர்தல் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *