தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 14 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 லட்சத்து 27 ஆயிரத்து 618 ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், செயற்கை கால், செல்போன், வங்கி கடன் மானியம், பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முடக்கியல் வல்லுநர் இனியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்..