கல்லிடைக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய கரடி – அப்பகுதியினரை விரட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த கரடி செய்வதறியாமல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களின் தறிக்கட்டு ஓடியுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் அங்கங்கமாக அலறடித்து ஓடிள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை அந்த கரடி தாக்கியுள்ளது, இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அப்பகுதியில் சித்திரைத் திருநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *