அய்யூர் கிராமத்தில் கரந்தமலை செல்லாயி அம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ செல்வவிநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டு கருப்பசாமி, அய்யனார், சப்தகன்னிமார்கள், திருக்கோவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்றது முன்னதாக செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்தால் அய்யனார் சாமி கண் திறந்து அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது

செல்லாயி அம்மன் கோவில் சென்று கிராமத்தின் சார்பாக மாலை அணிவித்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

பின்னர் அன்று இரவு சுவாமி முளைப்பாரியுடன் வீதி உலா சொல்லுதல் அதனை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்து வண்ணமாக கிடாய் வெட்டுதல் வியாழக்கிழமை அன்று அய்யனார் குதிரை எடுத்து ஊர்வலமாக சென்று பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெற்றது விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெரியஇலந்தைகுளத்தில், உச்சிமாகாளியம்மன்
உற்சசவ விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவில்உற்சவவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. விழாவையொட்டி,மேள தாளம் அதிர்வேட்டு முழங்க அதிர் வேட்டு பரிவாரத்துடன் நேற்று இரவு உச்சி மாகாளியம்மன் வீதி உலா வந்து தொடர்ந்து, 200ம் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.முன்னதாக மாவிளக்கு எடுத்தல்,தொடர்ந்து பொங்கல் வைத்தல,கிடாய் வெட்டுதல், அக்கினிசட்டி எடுத்தல் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வாக கோவில்களாகத்தில் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம், பெண்கள் வேப்பிலையை வைத்து வரி கொடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் . கிராம
மரியாதை காரர்கள் செய்திருந்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
சின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ சக்திவிநாயகர்ஸ்ரீ ஜோதிசித்தி, கருப்புச்சாமி,
ஸ்ரீபெருமாள்,ஸ்ரீ உறங்காபுலி, ஆகிய தெய்வங்களின் உற்சவ விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கிராமத்தார் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மரியாதைக்காரர்கள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *