தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆர்டிஓ சிங்காரவேலன் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்த முகாம் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாமில் வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் ஆலோசனைகள் மற்றும் தேவையான மருந்து மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டன நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா தலைமை வகித்தார்
மாவட்ட எஸ்பி ஆர் சிவப்பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் ஏராளமான வாகன ஓட்டுநர்கள் பங்கேற்று பயன்பெற்றனர் முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார போக்குவரத்து ஊழியர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்