பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து சீல் வைத்தனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி இன்று 16.05.2024-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அவரது குழுவினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து நடத்திய சிறப்பு சோதனையில் அரசால்தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்பனை செய்த கொளத்தூர், கொளக்காநத்தம், அயனாபுரம் ஆகிய கிராமங்களில் 3 – பெட்டி கடைகளுக்கு மருவத்தூர் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து மேற்படி கடைகளுக்கு சீல் வைத்தனர்

இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல்அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *