பண்ருட்டி நகராட்சி முஸ்லீம் துவக்கப்பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.

பண்ருட்டி,பண்ருட்டி தர்கா வண்டிமேடு நகராட்சிமுஸ்லீம் துவக்கப்பள்ளி ஆண்டு விழா பண்ருட்டி பைத்துல் மால் இஸ்லாமிக்
டிரஸ்ட் செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடந்தது.

தலைமை ஆசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார்.ஆசிரியை கீதா அறிக்கை வாசித்தார், பண்ருட்டி வட்டாரக்கல்வி அலுவலர் செல்வம், நகரமன்ற உறுப்பினர் முகமது ஹனீபா, அவுலியா நகர் ஜமாத் செயலாளர் சுல்தான் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பண்ருட்டிடி.எஸ்.பி. பழனி சிறப்பு
அழைப்பாளராக கலந்துகொண்டு சிறந்த மழலை மாணவ, மாணவியர்களுக்குசான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களை வழங்கினார்.

பண்ருட்டி காந்தி ரோடு ஹஜ்ரத் நூர்முகம்மது ஷா அவுலியா தர்கா நிர்வாக அறங்காவலர் அபுல்கலாம்ஆசாத் வாழ்த்துரை வழங்கினார்.

வட்டார வளமையம்இளஞ்செழியன்,தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மற்றும் கூட்டணிஆசிரியர் சாந்தகுமார், ஆசிரியர் பாலமுரளிகிருஷ்ணா, பண்ருட்டி இல்லம் தேடிக்கல்வி ஆசிரியர் சுரேஷ்ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின்முடிவில் ஆசிரியர் பழனிவேல்
நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *