மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு.
செங்குன்றம் செய்தியாளர்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணியில் இருந்து வாக்காளர்கள் ஆண்கள் பெண்கள் கூட்டமாக வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தனர். புதியதாக வந்திருந்த கல்லூரி மாணவிகளும் தங்களது ஜனநாயக கடமையை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது .
மேலும் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி தனது வாக்கை பதிவு செய்தனர்.
மாதவரம் மண்டலம் 3 ன் சார்பில் வாக்குப்பதிவு தேவைக்கான அனைத்து முன் ஏற்பாடுகளும், வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படும் நிலையில் தேர்தல் நடைபெறும் இடங்களில் பொது மக்களுக்கு தேவையான மருந்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.