சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் .உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கான 74.மற்றும் 75.ஆர் சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நான்கு வாக்கு பதிவு மையம் உள்ளிய ஆறு வாக்கு பதிவு மையத்தில்
தேனி பாராளூமன்ற தொகுதிக்கான உறுப்பினர்கான தேர்தலில் வாக்கு பதிவு நேற்று காலை 7.மணிக்கு தொடங்கி வாக்காளர்கள் வரிசையில் நின்று இவிஎம் மிஷினில் வாக்களித்து வந்தனரே இந்நிலையில் காலை 7,30.மணியளவில் காமராஜர் சிலை அருகில் மெயின் ரோட்டில் குறுக்கே சென்ற உயர் அழத்த மின் கம்பத்தில் மின் வயர் திடீறென்று அறுந்து சாலையில் விழந்ததால் மின் தடை ஏற்பட்டது
இதனால் காமராஜர் பள்ளி மற்றும் ஆர் சி நடுநிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த பெத் எண் 74.மற்றும் 75. உள்ளிட்ட ஆறு வாக்கு பதிவு மையச்களில் திடீர் மின் தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தநிலையில் வாக்காளர்கள் மெழகுவர்த்தி வெளிச்சத்தில் இவி.எம் மிஷினின் வாக்களித்தனர்.அரை மணி நேரம் நீடித்த மின் தடை பின்னர் மின் வாரிய ஊழியர்கள் மின் வயரை சரி செய்து பின் வாக்கு பதிவு மையத்திற்கு மின் சப்ளை வழங்கப்பட்டது இதனால் வாக்காளர்கள் அவதியுற்றனர்.
இதைபோல் அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட பூத் எண் 49.ல் வாக்கு பதிவு இயந்நிரம் கோளாறு ஆனதால் சுமார் அரைமணி நேரம் வாக்கு பதிவு செய்யமுடியாத நிலை வாக்காளர்களுக்கு ஏற்பட்டது.
இதன்பின் மாற்று வாக்கு பதிவு இயந்திரத்தை மையத்தில் வைக்கப்பட்டு பின்அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது.மேலும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குபட்ட கல்புளீச்சான்பட்டியில் உள்ள வாக்கு பதிவு மைய எண் 125.ல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொது செயலாளர் பி. வி கதிரவன் தனது மனைவி ஜெயபாரதியுடன் வாக்கை பதிவு செய்தார்.விக்கிரமங்கலம் குருவித்துறை மேலக்கால் உள்ளிட்ட பல்வேறு வாக்கு பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவ படை வீர்ர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.