முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு

நடந்தது என்ன

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆண்டாள் முள்ளு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை ராமலிங்கம் இவர் சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார் கடந்த 15 வருடத்திற்கு முன்பு வேலை பிடிக்காமல் VRS எழுதி கொடுத்து விட்டு சுய தொழில் செய்ய தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது சமுதாயப் பணி மீது ஆர்வம் கொண்ட துரை ராமலிங்கம் மறைந்த அவரது தந்தை பெயரில் கோதண்டபாணி அறக்கட்டளை அரசு பதிவு பெற்று சுமார் 13 ஆண்டு காலம் சமூக சேவை செய்து வந்தார்.

கடந்த 10 வருடம் முன்பு தன்னை பாஜக அரசியலில் இணைத்து கொண்டு கடலூர் மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இப்படி இருக்க தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மிகவும் பற்று கொண்ட துரை ராமலிங்கம் கோயம்புத்தூரில் அண்ணாமலைக்கு ஆதரவாக சில நாட்கள் அங்கே தங்கி ஓட்டு சேகரித்து வந்தார்.

இந்த நிலையில் 18.4.2024 அன்று மாலை 6 மணி அளவில் பிரச்சாரம் முடிந்த பிறகு அங்குள்ள கடை வீதியில் நண்பர்களோடு டீ குடிக்க சென்றிருந்த துரை இராமலிங்கம்யிடம் அதே கடைக்கு டீ குடிக்க வந்த இன்னொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது அண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போவார் கூறியவுடன் நாங்கள் உயிரைக் கொடுத்து அவரை வெற்றி பெற செய்வோம் என துரை ராமலிங்கம் கூறினார்

இதெல்லாம் ஆவர கதையா என அவருக்கு எதிரே ஒருவர் பேச அண்ணாமலைக்கு என்னோட உயிரே கொடுப்பேன் என்று இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்டார். உடனே துரை ராமலிங்கம் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சென்னை ஆதம்பாக்கம் அவரது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இதனால் கோயம்புத்தூர் மட்டுமல்ல தமிழகமே பரபரப்பானது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *